tamilnadu

img

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு

மும்பை, மார்ச் 3- டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. தினசரி வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 73 ரூபாய் வரை சரிந்தது. கொரோனா வைரஸ் தாக்கம், பொருளாதாரத்தை கடு மையாக பாதித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.  இதனால் பெட்ரோல், டீசல் விலை உய ரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வரு வதால், புதிய முதலீடு குறையும் அபாய மும் உள்ளது. ரூபாய் மதிப்பு 73 ரூபாய் 50 காசுகள் வரை சரியும் நிலை உள்ளதாக வும் சந்தை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

;